இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான வழக்கமான பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) கட்டமைக்கப்பட்ட ஏவுகணை அமைப்பாகும். இது ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP) கீழ் உருவாக்கப்பட்டது.
நாக், அக்னி மற்றும் திரிசூல் ஏவுகணைகள் மற்றும் பிருத்வி பாலிஸ்டிக் ஏவுகணை ஆகியவையும் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை.
இந்திய விமானப்படை மற்றும் இந்திய இராணுவம் பயன்பாட்டுக்காக இரண்டு ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் ஆகாஷ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை மே 2015 இல் அறிமுகப்படுத்தியது.
முதல் ஆகாஷ் ஏவுகணை மார்ச் 2012 இல் இந்திய விமானப் படைக்கு வழங்கப்பட்டது. இந்த ஏவுகணை ஜூலை 2015இல் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணை அமைப்பு லாஞ்சர், ஏவுகணை, கட்டுப்பாட்டு மையம், ஒருங்கிணைந்த பணி வழிகாட்டுதல் அமைப்பு, ஃபயர் கன்ட்ரோல் ரேடார், டிஜிட்டல் ஆட்டோபைலட் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
0 Comments