முப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்த சிந்தனைப் பகிர்வு மாநாடு / A Thought Sharing Conference on Joint and Integrated Operations of the Tri-Armies
TAMIL
முப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேம்படுத்துவது தொடர்பான புதிய யோசனைகள், முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்ட சிந்தனைப் பகிர்வு (பரிவர்த்தன் சிந்தன்) மாநாடு (08 ஏப்ரல் 2024) புதுதில்லியில் நடைபெற்றது.
முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமையில் இந்த ஒரு நாள் மாநாடு நடைபெற்றது.
முப்படைகளின் பன்முக செயல்பாடுகளுக்கு ஏதுவாக கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. கூட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் நடத்தப்படும் இந்த மாநாடு, முப்படைகள் தொடர்பான நிறுவனங்கள், ராணுவ விவகாரங்கள் துறை, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் தலைமையகம் மற்றும் முப்படைப் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் மாநாடாக இந்த சிந்தனைப் பகிர்வு மாநாடு அமைந்துள்ளது.
ENGLISH
A Thought Sharing (Parivarthan Sindan) conference (08 April 2024) aimed at discussing new ideas, initiatives and reforms related to enhancing joint and coordinated efforts of the tri-services was held in New Delhi. The one-day conference was chaired by the Commander of the Triforces, General Anil Chauhan.
Structures are being modified to accommodate the multi-functionality of the tri-armies. Efforts to improve joint integration are ongoing.
In this context, this conference is the first of its kind to be held by the heads of tri-service organizations, the Department of Military Affairs, the Joint Defense Staff and the heads of the tri-services.
0 Comments