எனது மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் ஐபோன் செயலியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதனை புதுதில்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகச் செயலாளர் திரு அபூர்வா சந்திரா தொடங்கிவைத்தார்.
மத்திய அரசு சுகாதாரத் திட்ட பயனாளிகளுக்கான மின்னணு சுகாதார பதிவுகள், தகவல்கள் அணுகலை மேம்படுத்தி இந்தச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி இமாச்சலப் பிரதேச தேசிய தகவல் மையம் மற்றும் தேசிய தகவல் மைய சுகாதார தொழில்நுட்ப குழுக்களால் உருவாக்கப்பட்டது.
இது மத்திய அரசின் சுகாதாரத் திட்டப் பயனாளிகளுக்கு தகவல் மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அம்சங்களை வழங்கும் வசதியான மொபைல் செயலியாகும். இந்த செயலி தற்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் தளங்களிலும் கிடைக்கும்.
0 Comments