தொழில்துறையுடன் இணைந்து மத்திய அரசால் நிறுவப்பட்ட கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சில் (CIDC), இந்திய கட்டுமானத் துறையின் பல்வேறு கூறுகளை தீவிரமாக ஈடுபடுத்தும் பிரதிநிதி அமைப்பாக செயல்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இன்றியமையாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 15-வது கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சிலின்(CIDC) விஸ்வகர்மா விருதுகள் பல்வேறு பிரிவுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த கட்டுமானத் திட்டங்கள், திட்டச் செயலாக்கத்தில் சிறந்த முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த மெட்ரோ ரயில் சேவை, சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட உள்கட்டமைப்பை வழங்குவது, நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
0 Comments