Recent Post

6/recent/ticker-posts

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு / Discovery of 10th century inscription at Vallimalai

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு / Discovery of 10th century inscription at Vallimalai

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இராட்டிரக்கூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கன்னரதேவனின் இரு கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் தொல்லியல் துறையினரும் வருவாய் துறையினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது வள்ளிமலை கோயில் அருகில் சிதிலமடைந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த கல்வெட்டுகளில், கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் கிருஷ்ணன் இராட்டிரக்கூட மன்னன் கன்னரதேவனின் வெற்றியைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கல்வெட்டுகளில் தமிழிலும், கன்னடத்திலும் ஓரே செய்தியைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகள் நாளடைவில் மண்ணுக்குள் புதைந்து, செடி கொடிகளால் சேதாரமாகி இருந்தன.

இக்கல்வெட்டுகள் வேலூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வெட்டுகள் 2011 -ஆம் ஆண்டு வள்ளிமலை இடும்பன் கோயில் அருகே கண்டெடுக்கப்பட்டு, அவற்றை பாதுகாப்பதற்காக முருகன் சன்னதி அருகே அப்போதைய தொல்லியல் துறை அதிகாரிகள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel