அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் தீக் ஷா 25, பங்கேற்றார். இலக்கை 4 நிமிடம், 4.78 வினாடியில் கடந்து மூன்றாவது பிடித்த உ.பி., வீராங்கனை தீக் ஷா வெண்கலம் வென்றார்.
இதன்மூலம் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்த இவர், புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2021ல் வாராங்கலில் (தெலுங்கானா) நடந்த தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹர்மிலன் பெயின்ஸ் (4 நிமிடம், 05.39 வினாடி) தேசிய சாதனை படைத்திருந்தார்.
0 Comments