Recent Post

6/recent/ticker-posts

எலோர்டா கோப்பை குத்துச்சண்டை 2024 / Elorda Cup Boxing 2024

எலோர்டா கோப்பை குத்துச்சண்டை 2024 / Elorda Cup Boxing 2024

பெண்களுக்கான 52 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நிகாத் ஜரீன், கஜகஸ்தானின் ஜாசிரா உரக்பயேவா மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு உலக சாம்பியன்' நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாக் ஷி 4-1 என உஸ்பெகிஸ்தானின் ரஹ்மோனோவா சைதாஹோனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அனாமிகா (50 கிலோ), மணிஷா (60 கிலோ) தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் யாதவ் (67 கிலோ), விஷால் (86), கவுரவ் சவுகான் (+92) தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினர்.

இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெற்றி, 8 வெண்கலம் என அதிகபட்சமாக 12 பதக்கங்கள் கிடைத்தன. கடந்த முறை 5 பதக்கம் கிடைத்திருந்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel