Recent Post

6/recent/ticker-posts

2024 ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் / India Wholesale Price Index Numbers for April 2024

2024 ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் / India Wholesale Price Index Numbers for April 2024

அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 ஏப்ரல் மாதத்தின் (ஏப்ரல், 2023-ஐ விட) வருடாந்தர பணவீக்க விகிதம் 1.26% ஆக உள்ளது (தற்காலிகமானது). 

2024 ஏப்ரல் மாதத்தில் முதன்மையான உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு,  பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.

மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 மார்ச்சுடன்  ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.79% ஆக இருந்தது.

2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்துப் பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.2% மற்றும் 0.20% ஆக இருந்தது.

2024 பிப்ரவரி இறுதி எண்ணிக்கை 95.5 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டது. மொத்த விலைக் குறியீட்டெண் குறித்த தற்காலிக புள்ளி விவரங்கள், இறுதி திருத்தக் கொள்கையின்படி திருத்தியமைக்கப்படும். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel