மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறை செயலாளர் டாக்டர் அருணீஷ் சாவ்லா, இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ)யுடன் இணைந்து மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024-ஐ புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
மருந்து தொழில்நுட்பத் திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சாதனங்களின் விரிவான மதிப்பு சங்கிலி பகுப்பாய்வை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் மருந்து தொழில்நுட்பத் துறையில் மாறக்கூடிய அம்சத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான முயற்சியாகும்.
தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் நெருக்கமான ஆலோசனை மூலம் இத்திட்டம், முக்கியமான சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டு உற்பத்தியை வளர்ப்பது மற்றும் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் மருந்து தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகளாவிய தலைமைத்துவமாக நிலைநிறுத்துகிறது.
0 Comments