Recent Post

6/recent/ticker-posts

திறன் மேம்பாட்டு சங்க சிறப்பு விருது 2024 / Skill Development Association Excellence Award 2024

திறன் மேம்பாட்டு சங்க சிறப்பு விருது 2024 / Skill Development Association Excellence Award 2024

திறன் மேம்பாட்டு சங்க சிறப்பு விருது 2024-ல் 3-வது வரிசையுடன் தேசிய அனல்மின் கழகம் உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது. இது அனைத்து இந்திய நிறுவனங்களிலும் மிக உயர்ந்த தரவரிசையாகும். 

கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழு முறை இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற ஒரே பொதுத்துறை நிறுவனம் தேசிய அனல்மின் கழகம் ஆகும். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 2024, மே 21 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய அனல்மின் கழகத்தின் மனித வளம் மற்றும் திறன் மேலாண்மைப்பிரிவு மேலாளர் திருமதி ரச்சனா சிங் பால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

அமெரிக்காவின் திறன் மேம்பாட்டு சங்கத்தால் நிறுவப்பட்ட இவ்விருதுகள் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரங்களில் ஒன்றாகும்.

இந்த சாதனை சர்வதேச அளவில் மனிதவள மேம்பாட்டில் தேசிய அனல்மின் கழகத்தின் சிறப்பான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.

 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel