ஆசியான்-இந்தியா சரக்கு ஒப்பந்தத்தில் வர்த்தகம் பற்றிய மறுஆய்வுக்கான 4 வது கூட்டுக் குழுக் கூட்டம் 2024 மே 7-9 தேதிகளில் மலேசியாவின் புத்ராஜெயாவில் நடைபெற்றது.
இதில் இந்தியாவின் வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மலேசியாவின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் துணைப் பொதுச் செயலாளர் (வர்த்தகம்) திருமதி மஸ்துரா அகமது முஸ்தபா ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். இந்தியா மற்றும் 10 ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகள் இந்த விவாதங்களில் பங்கேற்றனர்.
வர்த்தக ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதற்கான விவாதங்கள், பிராந்தியம் முழுவதும் உள்ள வணிகங்களுக்கு அதிக வர்த்தக வசதி அளிக்கும் கூட்டம் மே 2023 இல் தொடங்கியது.
ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் கூட்டுக்குழு இதுவரை நான்கு முறை கூடியுள்ளது. கூட்டுக் குழு தனது முதல் இரண்டு கூட்டங்களில் மறுஆய்வு பேச்சுவார்த்தைகளுக்கான அதன் குறிப்பு விதிமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தை கட்டமைப்பை இறுதி செய்தது.
புதுதில்லியில் 2024 பிப்ரவரி 18-19 தேதிகளில் நடைபெற்ற அதன் மூன்றாவது கூட்டத்திலிருந்து ஏஐடிஜிஏவை மறுஆய்வு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.
மீளாய்வின் போது ஒப்பந்தத்தின் பல்வேறு கொள்கைப் பகுதிகளைக் கையாள்வதற்காக மொத்தம் 8 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன, அவற்றில் 5 உப குழுக்கள் அவற்றின் விவாதங்களைத் தொடங்கியுள்ளன.
அனைத்து 5 துணைக்குழுக்களும் தங்கள் விவாதங்களின் முடிவுகளை 4வது ஏ.ஐ.டி.ஐ.ஜி.ஏ கூட்டுக் குழுவுக்கு அறிக்கை அளித்தன. மலேசியாவின் புத்ராஜெயாவில் 4வது ஏஐடிஐஜிஏ கூட்டுக் குழுவுடன் நேரடியாக துணைக்குழுக்கள் கூடின.
சுகாதார மற்றும் தாவர சுகாதாரத்திற்கான துணைக்குழு முன்னதாக 3மே 2024 அன்று கூடியது. கூட்டுக்குழு உப குழுக்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கியது.
இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் 11 சதவீத பங்களிப்புடன் ஆசியான் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்குதாரராக உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 122.67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
ஏ.ஐ.டி.ஜி.ஏ.வின் மேம்பாடு இருதரப்பு வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும். இரு தரப்பினரும் அடுத்ததாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 2024 ஜூலை 29-31 வரை 5வது கூட்டுக் குழு கூட்டத்தில் சந்திக்க உள்ளனர்.
0 Comments