கேரளாவின் கொச்சியில் 2024, மே 20 முதல் மே 30 வரை 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனை மற்றும் 26-வது அண்டார்டிகா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுக் கூட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
மைத்ரி-2 என்ற பெயரில் அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது.
இது அமைதி, அறிவியல் ஒத்துழைப்பு, மனிதகுலத்தின் நலனுக்காக அண்டார்டிகாவைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மற்றும் மூத்த அதிகாரிகள் தொடங்கிவைத்தனர்.
0 Comments