மக்களவைக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இன்று நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 56.68 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், 5ஆம் கட்டத் தேர்தலில் 57.65 சதவிகித (தோராய கணக்கீடு) வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- பிகார் - 53.07%
- ஜம்மு - காஷ்மீர் - 55.49
- ஜார்க்கண்ட் - 63.06%
- லடாக் - 67.15%
- மகாராஷ்டிரம் - 49.33%
- ஒடிஸா - 61.24%
- உத்தரப் பிரதேசம் - 57.79%
- மேற்கு வங்கம் - 73.06%
5ஆம் கட்டத் தேர்தலில் அதிகபட்சமாக மேற்குவங்கத்திலும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
0 Comments