77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ) மாணவர் சித்தானந்த் நாயக், “சன் ஃபிளவர்ஸ் வெர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ” என்ற குறும்படத்திற்காக 'லா சினிஃப்' விருதைப் பெற்றுள்ளார்.
2024 மே 23 அன்று அதிகாரப்பூர்வமாக வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர் இயக்குநரான சித்தானந்த் நாயர் இந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
சித்தானந்த் நாயக் இந்தக் குறும்படத்தின் இயக்குநராக உள்ள நிலையில், சூரஜ் தாக்கூர் ஒளிப்பதிவாளராகவும், வி. மனோஜ் படத்தொகுப்பாளராகவும், அபிஷேக் கதம் ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
0 Comments