Recent Post

6/recent/ticker-posts

இந்தியா ஈரான் இடையே சபஹர் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தானது / Chabahar Port Agreement signed between India and Iran

இந்தியா ஈரான் இடையே சபஹர் துறைமுக ஒப்பந்தம் கையெழுத்தானது / Chabahar Port Agreement signed between India and Iran

ஈரானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சபஹர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும், ஈரானும் நீண்டகாலமாக முயற்சித்து வந்தன. இந்நிலையில் சபஹர் துறைமுகத்தின் ஒரு முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா இயக்குவதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. 

இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில் இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் மற்றும் ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்பு ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

இதன்படி சபஹர் துறைமுக மேம்பாட்டு திட்டத்தில் ஷாஹித்-பெஹெஷ்டி முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். வெளிநாட்டு துறைமுக நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel