இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) மற்றும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், மே 09, 2024 அன்று, கப்பல்கள் கட்டுவதற்காக இந்திய பொது மற்றும் தனியார் கப்பல் கட்டும் தளங்களுக்கு உள்நாட்டு கடல் தர அலுமினியத்தை உற்பத்தி செய்து வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
காலாண்டு விலை, பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் விற்றுமுதல் தள்ளுபடி போன்ற நன்மைகளையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும்.
ஐ.சி.ஜி கடற்படை தற்போது ஆழமற்ற நீரில் செயல்படும் திறன் கொண்ட அலுமினிய பட்டைகளைக் கொண்ட 67 கப்பல்களை இயக்கி வருகிறது. கடலோர பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடல் தர அலுமினியத்தைப் பயன்படுத்தும் இதுபோன்ற கப்பல்களை மேலும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.
0 Comments