அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை கண்டறிந்தனர்.
ஏற்கெனவே பேரங்கியூர், திருமுண்டீஸ்வரம் போன்ற இடங்களில் கிடைத்திருக்கிறது. தற்போது மேலும் ஒரு கல்வெட்டு கிடைத்திருக்கிறது.
"இக்கல்வெட்டு 'ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி' என்று தொடங்குகிறது. இவனது நான்காவது ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 960 பொறிக்கப்பட்ட கல்வெட்டு திரு முனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு ஏமப்பேரூர் என்று இவ்வூரை அழைக்கிறது. இது ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது.
"ஏமப்பேரூர் என்பதே தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வூர் திருவாலந்துறை ஆழ்வாருக்கு இவ்வூர் மன்றாடி நிகரிலி மூர்த்தி சூரியன் சந்திரர் உள்ளவரை ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை இக்கோயிலை நிர்வகித்த பன் மாகேஸ்வரர் வசம் ஒப்படைத்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் இருந்து ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும் அறிய முடிகிறது.
0 Comments