இரான் - அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் உயிரிழந்துவிட்டனர்.
முகமது மொக்பரை ஈரானின் தற்காலிக அதிபராக அந்நாட்டு இமாம் மூசவி கொமெய்னி நியமித்தார். அடுத்த 50 நாட்களுக்கு முகமது மொக்பர் ஈரானின் நிர்வாகத் தலைவராக செயல்படுவார்.
புதிய ஜனாதிபதி தேர்வாகும் வரை சட்டத்துறை, நீதித்துறை தலைவர்கள் மொக்பருக்கு ஒத்துழைப்பு தர கோரிக்கை வைத்துள்ளார். ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்.
0 Comments