Recent Post

6/recent/ticker-posts

ஐ.நாவில் பாலஸ்தீன தீர்மானம் வெற்றி / Palestine Resolution Wins at UN

ஐ.நாவில் பாலஸ்தீன தீர்மானம் வெற்றி / Palestine Resolution Wins at UN

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் நேற்று (10-05-24) கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐ.நா அவையில் முழு நேர உறுப்பினராக சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. மேலும், 25 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.

அதிக பெரும்பான்மை ஆதரவின் மூலம், பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக இருக்கவிருக்கிறது. கடந்த மாதம், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் விட்டோ அதிகாரத்தால் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel