மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (ஆர்இசி), முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் அவுட்லுக் புவிக்கோள் நிலைத்தன்மை உச்சிமாநாடு மற்றும் 2024 விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சாம்பியன் விருதை வென்றது.
இந்த விருது வழங்கும் விழாவை கோவா ஐஐடி உடன் இணைந்து அவுட்லுக் குழுமம், கோவாவில் ஏற்பாடு செய்திருந்தது. ஆர்இசியின் மும்பை அலுவலக மூத்த பொது மேலாளர் திருமதி சரஸ்வதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விருதைப் பெற்றுக் கொண்டார்.
0 Comments