இந்தியா – ஆஸ்திரேலியா – இந்தோனேசியா இடையேயான இரண்டாவது முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பயிலரங்கம் 2024 மே 15 முதல் 17-ம் தேதி வரை கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் துரோணாச்சார்யா தளத்தில் நடைபெற்றது.
'இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள்' என்ற கருப்பொருளில் இந்தப் பயிலரங்கம் நடைபெற்றது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள மூன்று கடல்சார் நாடுகளுக்கிடையேயான கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில் மூன்று நாடுகளின் கடற்படைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பயிலரங்கின் போது, தகவல் பரிமாற்ற வழிமுறைகள், கடல்சார் கள விழிப்புணர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு, கடல்சார் சட்ட அமலாக்கம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.
0 Comments