Recent Post

6/recent/ticker-posts

நாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு / Nagastra-1 drone inducted into Indian Army


நாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு / Nagastra-1 drone inducted into Indian Army

நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் எகனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் (இஇஇஎல்) நிறுவனம் 'நாகாஸ்திரா-1' ட்ரோனை உருவாக்கி உள்ளது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 'நாகாஸ்திரா-1' ட்ரோன் முதல் தொகுப்பு இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. எதிரிகளின் இலக்கை கச்சிதமாக தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா-1 என்ற தற்கொலைப்படை ட்ரோன் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

நாகாஸ்திரா-1 ட்ரோன்கள் எதிரிகளின் பயிற்சி முகாம்கள், ஏவுதளங்கள் மற்றும் ஊடுருவல்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. எனவே ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.

இந்திய ராணுவம் இஇஇஎல் நிறுவனத்துக்கு 480 ட்ரோன்களை ஆர்டர் செய்தது. அவற்றில் 120 நாகாஸ்ட்ரா-1 ட்ரோன்கள் ராணுவ வெடிமருந்து கிடங்கிற்கு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகாஸ்திரா-1 என்ற ராணுவ ட்ரோனை மனிதர்கள் எளிதில் எடுத்துச்செல்ல முடியும். 9 கிலோ எடை கொண்ட நாகாஸ்திரா ட்ரோன், வானில் 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. 

30 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நாகாஸ்திரா ட்ரோன்கள் 200 மீட்டர் உயரம் வரை வானில் எளிதாக பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel