Recent Post

6/recent/ticker-posts

கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணி - முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / 10th Phase of Excavation at Keezhadi - Chief Minister Stalin inaugurated

கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணி - முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார் / 10th Phase of Excavation at Keezhadi - Chief Minister Stalin inaugurated

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று காலை 11.20 மணி அளவில் சென்னையில் இருந்து தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார்.

கீழடியில் இதுவரை மூன்று கட்டங்களாக மத்திய அரசு அகழாய்வுத் துறையும், ஆறு கட்டங்களாக தமிழ்நாடு தொல்லியல் துறையும் மொத்தம் ஒன்பது கட்டங்களாக அகழாய்வுப் பணி செய்து வந்தது.

பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை தொடங்கப்பட்டுள்ள இந்த பத்தாம் கட்ட அகழாய்வுப் பணி ஓராண்டுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel