சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 10 ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது இரண்டு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு குழிகளும் 2 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில், அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து தற்போது தா என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 Comments