காங்கிரஸ்காரரான விஷால் படேலுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையால் சங்லி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனை வேட்பாளர் அதே தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.
விஷால் பாட்டில் கட்சியின் முடிவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரது பெயரை பரிந்துரைத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்வஜீத் கடம், விஷாலின் ஆதரவில் காங்கிரஸின் பலம் மக்களவையில் 100 ஆக உயருமென தெரிவித்துள்ளார்.
விஷால் பாட்டில் மற்றும் எம்எல்ஏ விஷ்வஜீத் கடம் வியாழக்கிழமை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். கார்கேவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார் பாட்டில்.
முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டிலின் பேரனான விஷால் பாட்டில். தனித்து நின்று பாஜகவின் இரண்டு முறை எம்பி சஞ்சய்காகா பாட்டிலை தோற்கடித்துள்ளார்.
0 Comments