Recent Post

6/recent/ticker-posts

18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு / Om Birla elected Speaker of 18th Lok Sabha

18வது மக்களவையின் சபாநாயகராக  ஓம் பிர்லா தேர்வு / Om Birla elected Speaker of 18th Lok Sabha

நாடாளுமன்ற மக்களவையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில், ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிட்டார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டார்.

ஓம் பிர்லா - கொடிக்குனில் சுரேஷ் ஆகிய இருவரில் யார் சபாநாயகர் என்பதை தீர்மானிக்க குரல் வாக்கெடுப்பு முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் ஓம் பிர்லா வெற்றி பெற்றார். பிரதமர் மோதி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel