உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, 77வது உலக சுகாதாரப் பேரவை கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு உறுப்பு நாடுகளால் செய்யப்பட்ட 300 முன்மொழிவுகளின் அடிப்படையில் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் (ஐ.எச்.ஆர் 2005) திருத்தங்கள் செய்ய ஒப்புக்கொண்டது.
சர்வதேச சுகாதார விதிமுறைகளில் இலக்கு வைக்கப்பட்ட திருத்தங்கள், சர்வதேச பொது சுகாதார அவசரநிலைகள் மற்றும் தொற்றுநோய் அவசரநிலைகளுக்கு தயாராகவும் பதிலளிக்கவும் நாடுகளின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
ஐஎச்ஆர் (2005) இன் கீழ் தேவையான முக்கிய திறன்களை உருவாக்குதல், வலுப்படுத்துதல் மற்றும் பராமரிப்பதில் வளரும் நாடுகளை ஆதரிப்பதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் ஆகியவை அவற்றில் அடங்கும்.
0 Comments