அது, 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் வெறும் 2.49 சதவீதமாகக் குறைந்துள்ளது.அதுமட்டுமின்றி, 2004-05-ஆம் நிதியாண்டு முதல் 2013-14-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதியின் சிஏஜிஆா் பங்களிப்பு 13.94 சதவீதமாக இருந்தது.
அது, அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் -2.29 சதவீதமாகக் குறைந்துள்ளது. உள்நாட்டு நிலக்கரி வளங்களை மேம்படுத்துதல், நிலக்கரி பயன்பாட்டில் புதுமையான தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் 2014-24 காலகட்டத்தில் நாடு எரிசக்தி பாதுகாப்பில் தன்னிறைவை நோக்கி முன்னேற்றம் கண்டுவருகிறது.
அதன் வெளிப்பாடாகவே நிலக்கரி இறக்குமதி சிஜிஆா் சரிவைக் கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2.31 கோடி டன்னாக இருந்த நாட்டின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரலில் 2.61 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதிப்பீட்டு மாத மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2023 ஏப்ரலில் 1.52 கோடி டன்னாக இருந்தது. கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 47.7 லட்சம் டன்னிலிருந்து 49.7 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
முந்தைய மாா்ச் மாத்தில் நிலக்கரி இறக்குமதி 2.40 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாத நிலக்கரி இறக்குமதி 8.93 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் கூறியிருந்தது.
2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.7 சதவீதம் அதிகரித்து 26.82 கோடி டன்னாக இருந்தது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 24.91 கோடி டன்னாக இருந்தது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
0 Comments