Recent Post

6/recent/ticker-posts

2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி / India's Seafood Exports in FY 2023-24

2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி / India's Seafood Exports in FY 2023-24

கடந்த நிதியாண்டான 2023-24-ம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் இந்தியா ரூ.60,523.89 கோடி (7.38 பில்லியன் டாலர்) மதிப்பிலான 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறால் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. அமெரிக்காவும் சீனாவும் இந்திய கடல் உணவுப் பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்களாக இருந்தன. 2023-24-ம் நிதியாண்டில், அளவின் அடிப்படையில் ஏற்றுமதி 2.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி மட்டும் ரூ.40,013.54 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட மீன் இரண்டாவது பெரிய கடல் உணவு ஏற்றுமதிப் பொருள் என்ற இடத்தைப் பிடித்தது. 

இதன் ஏற்றுமதி ரூ.5,509.69 கோடி மதிப்புக்கு மேற்கொள்ளப்பட்டது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டில், மொத்தம் 17,35,286 மெட்ரிக் டன் கடல் உணவை இந்தியா ஏற்றுமதி செய்தது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel