ஆந்திர பிரதேசத்தில் பகல் 2 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
அதேபோல, மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை தக்கவைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், எதிர்க்கட்சியான சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில், தெலுங்குதேசம் 120க்கும் மேற்பட்ட இடங்களிலும், ஜனசேனை 15க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 5க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
0 Comments