ரஷியாவின் காஸானில் கடந்த 12-ஆம் தேதி பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், அதில் 90 நாடுகளை சேர்ந்த 47க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ரஷியாவில் நடைபெறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் குழுவுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இதன் மூலம், தற்போது ஒரேயொரு பதக்கம் மட்டுமே வென்றுள்ள இந்தியா பதக்கப்பட்டியலில் 21-வது இடத்தில் உள்ளது. பதக்கப்பட்டியலில் 42 தங்கம், 26 வெள்ளி, 15 வெண்கலத்துடன் ரஷியா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. பெலாரஸ் 2-வது இடத்திலும், சீனா 3-வது இடத்திலும் உள்ளன.
0 Comments