மார்ச் 2023ல் 5.79 சதவிகிதமாக ஆக இருந்த பணவீக்கம் 2024 மார்ச் மாதம் ஒப்பிடும்போது 4.20 சதவிகிதமாக இருந்தது. 2024 ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் 3.87 சதவிகிதமாகவும், இது 2023 ஏப்ரலில் ஒப்பிடும்போது 5.09 சதவிகிதமாக இருந்தது.
பிப்ரவரி, 2023ல் இருந்த 6.16 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், 2024 பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் 4.90 சதவீதமாக உள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் பரவியுள்ள 317 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டைத் தொகுத்து வருகிறது. அதே வேளையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாதங்களுக்கான குறியீடுகள் அறிக்கையில் வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 2024 க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.3 புள்ளிகள் அதிகரித்து 139.2 புள்ளிகளாக இருந்தது. 2024 மார்ச் மாதத்திற்கான குறியீடு 0.3 புள்ளிகள் குறைந்து 138.9 புள்ளிகளாக இருந்தது. ஏப்ரல் 2024 க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4 ஆக உள்ளது.
0 Comments