அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 மே மாதத்தில் (மே, 2023-ஐ விட அதிகரித்து) வருடாந்தர பணவீக்க விகிதம் 2.61% ஆக உள்ளது (தற்காலிகமானது).
2024 மே மாதத்தில் உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.
மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 2024 மே மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.20% ஆக இருந்தது.
2024 மார்ச் மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்துப் பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.4% மற்றும் 0.26% ஆக இருந்தது
0 Comments