Recent Post

6/recent/ticker-posts

மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் / Lok Sabha Election 2024 Results

மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் / Lok Sabha Election 2024 Results

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை(மே 4) காலை 8 மணிமுதல் நடைபெற்றது.

இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ என்ற பெயரில் உருவான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது. இதில், தேசியவாத காங்கிரஸ்(சரத்) வேட்பாளர் போட்டியிட்ட ஒரு தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21, தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த முறை பாஜக 36.56 சதவிகிதமும், காங்கிரஸ் 21.19 சதவிகிதமும் வாக்குகள் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 39 இடங்களிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக - 240, தெலுங்கு தேசம் - 16, ஐக்கிய ஜனதா தளம் - 12, சிவசேனை(ஷிண்டே) - 7, லோக் ஜனசக்தி ராம்விலாஸ் - 5, மதசார்பற்ற ஜனதா தளம் - 2, ஜனசேனா - 2, ராஷ்டிரிய லோக் தளம் - 2, தேசியவாத காங்கிரஸ் - 1, அப்னா தால் (சோனிலால்) - 1, பிற - 4 என மொத்தம் 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் - 99, சமாஜவாதி - 37, திரிணமூல் - 29, திமுக - 22, சிவசேனை(உத்தவ்) - 9, தேசியவாத காங்கிரஸ்(சரத்) - 8, மார்க்சிய கம்யூ. - 4, ராஷ்டிரிய ஜனதா தளம் - 4, ஆம் ஆத்மி - 3, ஜேஎம்எம் - 3, முஸ்லிம் லீக் - 3, இந்திய கம்யூ. - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - 2, கேரள காங்கிரஸ் - 1, மதிமுக - 1, பிற - 5 என மொத்தம் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தனித்துப் போட்டியிட்ட கட்சிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 4, ஏஐஎம்ஐஎம் - 1, சிரோமணி அகாலி தளம் - 1, ஜோரம் மக்கள் இயக்கம் - 1, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 1, சுயேச்சைகள் - 7, பிற - 2 என மொத்தம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel