18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதோடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றது.
இதில், 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஒடிசாவில் கடந்த 2000 முதல் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியிலிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய முதலே முன்னிலையிலிருந்த பாஜக கூட்டனி தற்போது, மொத்தமுள்ள 147 இடங்களில் 80 இடங்களில் முன்னிலை வகிக்க 48 இடங்களுடன் ஆளும் பிஜு ஜனதா தளம் பின்தங்கியிருக்கிறது.
இதன்மூலம், பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. இவை தவிர காங்கிரஸ் 15 இடங்களுடன் முன்னிலையில் இருக்கிறது.
0 Comments