குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, புதுதில்லியில் இன்று தொடங்கிவைத்தார்.
மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்கள் திருமதி அனுப்பிரியா பட்டேல், திரு ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
பிரச்சார இயக்கத்திற்கான இலட்சினை, சுவரொட்டிகள், வானொலி விளம்பரங்கள் உள்ளிட்டவற்றையும் இவர்கள் வெளியிட்டனர். மேலும் வயிற்றுப் போக்கு காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கான ஓஆர்எஸ் கரைசல் மற்றும் ஸிங்க் மாத்திரைகளையும் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கினர்.
வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பதை முற்றிலும் தடுப்பதே இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படவுள்ளது.
0 Comments