ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து 9 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பிற இடங்களுக்கு பகிர்ந்து விநியோகிக்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் கொண்டுசெல்லும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டங்கள் கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறையில் செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை நிறுவி இணைப்பதன் ஒரு பகுதியாகும், இதில் 200 ஜிகாவாட் ஏற்கனவே நிறுவப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
0 Comments