தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மைச் செயலராக பிகே மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதமரின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை அப்பதவியில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஜித் தோவல், பிகே மிஸ்ராவுக்கு கேபினட் அமைச்சர்கள் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அமித் காரே, தருண் கபூர் ஆகியோர் பிரதமரின் ஆலோசகர்களாக மறு நியமனம் செய்யப்படுவதாகவும் அமைச்சரவை நியமனங்களுக்கான குழுவானது உறுதிப்படுத்தியுள்ளது.
ஜூன் 10 தொடங்கி இவர்களது பதவிக் காலம் 2 ஆண்டுகள் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மத்திய அரசு செயலாளர்கள் பதவி அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments