தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த பாஸ்கர் ஒய்வு பெற்றதையடுத்து, தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த எஸ். மணிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே எஸ். மணிகுமார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தவர். இதையடுத்து அவர் இங்கிருந்து கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டியிருந்தார்.
அங்கு ஒய்வு பெற்றதையடுத்து தற்போது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதையடுத்து தற்போது அவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை பதவி வகிப்பார். இவருடன் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற ராஜா இளங்கோ மற்றும் வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகியோர் அங்கு நீதிபதிகளாக உள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையத்தை பொறுத்தவரை எஸ். மணிகுமார், கண்ணதாசன் மற்றும் ராஜா இளங்கோ ஆகியோரும் செயல்படுவர்.
0 Comments