தேசிய மின்னணு-புத்தகாலயா என்ற டிஜிட்டல் நூலக தளத்திற்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளையுடன் புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
உயர்கல்வித் துறை செயலாளர் திரு கே.சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர், திரு சஞ்சய் குமார், இணைச் செயலாளர் திருமதி அர்ச்சனா சர்மா அவஸ்தி மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தப் புத்தகாலயா, அதன் முதல் வகையான டிஜிட்டல் நூலகம், ஆங்கிலம் தவிர 22 க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்ட 1,000 க்கும் மேற்பட்ட கல்வி சாரா புத்தகங்களை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே வழங்குவதன் மூலம் இந்திய குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாழ்நாள் முழுவதும் வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்ட முயற்சிக்கும்.
0 Comments