விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் உள்ள மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை 30.7 மி.மீ. உயரமும், 25.6 மி.மீ அகலமும் கொண்ட சுடுமண்ணாலான குந்தளம் என்ற சிகை அலங்காரத்துடன்கூடிய பாவை பொம்மையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
முன்னதாக, இந்தப் பகுதியில் நடைபெற்ற அகழாய்வில் கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால செங்கற்கள் உள்ளிட்ட தொன்மையான பொருள்கள் கிடைத்தன. மேலும், இரண்டாம் கட்ட அகழாய்வின் போது, இதேபோன்று பாவையின் சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments