Recent Post

6/recent/ticker-posts

சென்னானூர் அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை கண்டெடுப்பு / Discovery of flint seal at Chennanur Excavations

சென்னானூர் அகழாய்வில் சுடுமண்ணாலான முத்திரை கண்டெடுப்பு / Discovery of flint seal at Chennanur Excavations

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் புதிய கற்கால சான்றுகளை சேகரிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. 

இதற்குமுன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்குள்ள மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

இங்குள்ள ஒரு கிணற்றில் கிடைத்த செங்கற்கள் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதால் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது.

இதையடுத்து இங்கு அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லால் ஆன உடைந்த நிலையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றை அகழாய்வுக் குழுவினா் கண்டெடுத்தனா்.

இந்த நிலையில் அகழ்வாய்வு நடைபெற்று வரும் பகுதியில் ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 61 செ.மீ ஆழத்தில் சுடுமண் முத்திரை கிடைத்தது. இந்த முத்திரையின் நீளம் 4.5 செ.மீ மற்றும் விட்டம் 3.2 செ.மீ கொண்டு காணப்படுகிறது. இந்த முத்திரையானது மண் பானையின் விளிம்பு பகுதியை அழகு படுத்துவதற்காக இந்த முத்திரையை பயன்படுத்தி இருக்கலாம்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel