Recent Post

6/recent/ticker-posts

ஊத்தங்கரை அகழாய்வு பணியில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுப்பு / Discovery of Neolithic materials in Uthangarai excavations

ஊத்தங்கரை அகழாய்வு பணியில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுப்பு / Discovery of Neolithic materials in Uthangarai excavations

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் தக்களி போன்ற தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

இன்று (28.06.2024) ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கொழுமுனையின் எடை 1.292 கி.கி ஆகும். இதன் நீளம் 32 செ.மீ அகலம் 4.5 செ.மீ மற்றும் தடிமன் 3 செ.மீ கொண்டு காணப்படுகிறது. 

இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவாசாயம் மேற்கொள்ள ஏர்கலப்பையில் கொழு முனையாக பயன்பட்டிருக்கலாம். இப்பொருள் கிடைத்த தொல்லியல் சூழலைக் கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாற்றுக் காலமாக இருக்கலாம்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel