உலகின் மிகப் பெரிய தானியக் கையிருப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (03.06.2024) புதுதில்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய கூட்டுறவு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், உணவுப்பதன தொழில்கள் துறை ஆகியவற்றின் செயலாளர்கள், இந்திய உணவுக்கழகம் மற்றும் நபார்டு வங்கியின் அதிகாரிகளுடன் முதலாவது கூட்டத்தை நடத்தினர்.
இந்தத் திட்டம் மாநில அரசுகள், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு, தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழகம் ஆகியவற்றின் உதவியுடன் கூடுதலாக 500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது.
0 Comments