இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை (ஜூன் 26, 2024) நடைபெறுகிறது.
துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவியில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்திய கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் போட்டியிடுகின்றனர்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக சபாநாயகரை தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், இந்த முறை இந்த பாரம்பரியம் உடைகிறது.
0 Comments