கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனை வாங்கி குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி 36 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments