ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரவை வீழ்த்தி தன் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார் அவர்.
அந்த இறுதிப் போட்டியின் மூன்று சுற்றுகள் முடிவில் 6-3, 2-6, 5-7 என பின்தங்கியிருந்த நிலையில், கடைசி 2 செட்களையும் 6-1, 6-2 என எளிதாக வென்று அசத்தினார் அவர்.
இது கார்லோஸ் ஆல்கரஸின் மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்தது. 2022ல் முதல் முறையாக அமெரிக்க ஓப்பனை வென்றிருந்த அவர், கடந்த ஆண்டு விம்பிள்டன் ஃபைனலில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தார்.
இதன்மூலம் மிக இளம் வயதில் மூன்று வகையிலான தரைகளிலும் (ஹார்ட் கோட், புல்தரை, களிமண் தரை) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்திருக்கிறார் ஆல்கரஸ்.
மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங்கில் அவர் இப்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இத்தாலியின் யானிக் சின்னர் முதலிடத்தில் இருக்கிறார்.
0 Comments