சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 2ஆம் நாளில் தனது முதல் இன்னிங்ஸில் 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய மகளிரணி.
ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய மகளிரணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு மகளிரணியும் டெஸ்ட்டில் 600 ரன்களை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமான ரன்னாக இருந்தது.
0 Comments