இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மக்களவைக் குழுத் தலைவர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை கூடிய மக்களவைக் கூட்டத்தொடரிலும், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவராக மக்களவையில் அவைத் தலைவரை வாழ்த்தி தனது முதல் உரையையும் நிகழ்த்தினார்.
இந்த நிலையில், மக்களவை செயலகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றும், ஜூன் 9, 2024 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments