இவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், ராணுவத்திற்கு விரைவில் புதிய தளபதி அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது. இருப்பினும், மக்களவைத் தேர்தல் காரணமாக அறிவிப்பு வராமல் இருந்தது.
இந்நிலையில், நாட்டின் அடுத்த ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் திவேதி ராணுவ தலைமை தளபதி பொறுப்பை ஏற்கவுள்ளார்.
இப்போது ராணுவத் துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30வது இராணுவ தலைமை தளபதியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளையும் கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments